உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சோபுரநாதர் கோவிலில் சுவாமி மீது சூரிய ஒளிபடும் அதிசய நிகழ்வு

திருச்சோபுரநாதர் கோவிலில் சுவாமி மீது சூரிய ஒளிபடும் அதிசய நிகழ்வு

புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய நிகழ்வு நடந்தது.


புதுச்சத்திரம் அடுத்த திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் சுவாமி சிலைமீது சூரிய ஒளி படும், அதிசய நிகழ்வு நடப்பது வழக்கம். இந்த சூரிய அஸ்தமன பூஜையில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தால் பல்வேறு தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம். இந்தாண்டு சூரிய அஸ்தமன பூஜை நேற்று நடந்தது. அதையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு திருச்சோபுரநாதருக்கு பால், தயிர், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு, அபிஷேகம் நடந்தது. மாலை 6.00 மணிக்கு திருச்சோபுரநாதர் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !