உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பன்னீர்மடை கிருஷ்ணசாமி கோயிலில் கருட சேவை உற்சவம்

பன்னீர்மடை கிருஷ்ணசாமி கோயிலில் கருட சேவை உற்சவம்

பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி திருக்கோயில் சார்பில் கருட சேவை நிகழ்ச்சி நடந்தது.


விழாவை ஒட்டி செல்வ விநாயகர், உலகளந்த பெருமாள், கிருஷ்ணசாமி மற்றும் ஆஞ்சநேயர் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்ரத்தில் உற்சவமூர்த்திகள் எழுந்தருள, அகண்ட திவ்ய நாம பிரபஞ்ச பஜனையுடன் சுவாமி திருவீதி உலா பன்னீர்மடை ராமஜூலு அம்மாள் திருக்கோயில் வழியாக நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பஜனை குழுவினருக்கு கோயில் கமிட்டி சார்பில் சால்வை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !