வீணாக பேசாதே என்று உபதேசிக்கிறார் வியாசர்
* வீணாக பேசாதே. கடவுளின் பெயரைச் சொல்.
* மனிதனின் பிறவி குணம் எப்போதும் மாறாது.
* தர்மத்தின் பாதையில் சென்றால் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும்.
* புத்தியால் மனதை அடக்கு. வெற்றி பெறுவாய்.
* கோபத்தை கைவிடு. துன்பம் நெருங்காது.
* பிறந்தவர்களுக்கு மரணம் நிச்சயம்; இறந்தவர்களுக்கு மறுபிறவி நிச்சயம்.
* வேதம் சொன்ன வழியில் வாழ்க்கை நடத்து.
* கடவுளை சரணடைவதே நீ கல்வி கற்றதன் பயன்.
* பலன் கருதாமல் கடமையைச் செய்பவரே ஞானி.
* வயதாக வயதாக ஆற்றல் குறைகிறது. ஆனால் ஆசையோ குறைவதில்லை.
* பெரியவர்கள் சொல்வதை கேள். அதன்படி நட.
* கடவுளுக்கு சேவை செய்வதே உண்மையான மகிழ்ச்சி.
* வேதாந்தம் உண்மையைச் சொல்கிறது. அதை அறிந்து கொள்.
* பேராசையை கைவிடு. இல்லாவிட்டால் அது உன் அறிவை அழிக்கும்.
* ஒழுக்கமாக வாழ். உனக்கு நற்கதி உண்டு.
* உழைத்த பணத்தில் தர்மம் செய். நிம்மதி கிடைக்கும்.