உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் சதய நட்சத்திர தினமான நேற்று திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. சிவபெருமானுக்கு உகந்த பன்னிரு சைவத் திருமுறைகளில் 8வது திருமுறையாக திருவாசகம் உள்ளது. மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின் 51 பதிகங்களையும், அதில் உள்ள 658 பாடல்களையும் செம்பொற்ஜோதிநாதர் கோவில் ஓதுவார்கள் நேற்று காலை முதல் மதியம் வரை ஓதினர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நாச்சியப்பன் சிவனடியார் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !