உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நம் அனைவருக்கும் சுயபுத்தி அவசியம்: பாரதியார்

நம் அனைவருக்கும் சுயபுத்தி அவசியம்: பாரதியார்

* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம்.
* பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து சாப்பிடு.
* நம்பிக்கையுடன் முயற்சி செய். வெற்றி பெறுவாய்.  
* எத்தனை தடை வந்தாலும் எடுத்த செயலை கைவிடாதே. அதை முடித்துக்காட்டு.   
* எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருக்கு உதவினால் நீயே உயர்ந்தவன்.  
* எந்த ஏற்றத்துக்கும் ஒரு இறக்கம் உண்டு. எந்தத் துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு.
* விருந்தினர் போல் இந்த உலகில் சிறிது காலமே தங்க வந்திருக்கிறாய்.
* பெண்களின் பங்களிப்பு இருந்தால் தான் குடும்பம் முன்னேறும்.  
* அறிவைத் தேடிச் செல். செல்வம் தானாக வரும்.
* கஷ்டம் வரும் போது தான் உனக்கு பல உண்மைகள் தெரிய வரும்.
* கடவுள் எல்லா உயிர்களிலும் இருக்கிறார்.
* மனதில் ஆழ்ந்த சிந்தனை எழுந்து விட்டால், விரைவில் லட்சியத்தை அடைவாய்.
* அறிவு, செல்வம், தைரியம் மூன்றும் உனக்கு அவசியம்.
* எதையும் உடனுக்குடன் செய்தால் அந்தச் செயல் வெற்றி பெறும்.
* குழந்தைக்கு கல்வியுடன் விளையாட்டையும் சொல்லிக் கொடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !