உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி திருவிழாவிற்கு 10 நாட்கள் அனுமதி கிடைக்குமா? சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்ப்பு

நவராத்திரி திருவிழாவிற்கு 10 நாட்கள் அனுமதி கிடைக்குமா? சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்ப்பு

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 வரை அனைத்து நாட்களும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தமிழகத்தின் மலைவாச சிவஸ்தலமான இக்கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் நவராத்திரி திருவிழா மிகவும் புகழ்பெற்றது. பல ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏராளமான பக்தர்கள் திருவிழா துவங்கிய நாள் முதல் முடியும் வரை மலையில் தங்கி தினமும் கொலுபூஜை, பஜனை வழிபாடு செய்து ஆனந்தவல்லி அம்மனை வழிபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி தற்போது அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல் 4 நாட்கள் வீதம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நவராத்திரி விழாவில் அம்மனை தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், விழா நடக்கும் நாளான நாளை அக்.11 முதல் அக். 20 வரை அனுமதிக்க கோயில் நிர்வாகம், வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !