அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :4640 days ago
தியாகதுருகம்: தியாகதுருகம் அடுத்த சின்னமாம்பட்டு அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. சின்னமாம்பட்டு பகுதியில் உள்ள அய்யனார் கோவில் செப்பனிட்டு, புதுப்பிக்கப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 6ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின்னர் யாகசாலைபிரவேசம், கோபூஜை, அங்குரார்பணம் உள்ளிட்ட பூஜைகளும் நடத்தப் பட்டது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து, விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்விக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது.