ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயிலில் நாளை தை அமாவாசை
ADDED :4640 days ago
ஏரல்: ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் தை அமாவாசை திருவிழா நாளை நடக்கிறது. புகழ்பெற்ற ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயிலின் இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த ஜன.31ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. முக்கிய விழாவான தை அமாவாசை திருவிழா நாளை நடக்கிறது. நாளை மதியம் 1 மணிக்கு சுவாமி உருகுபலகை தரிசனம் அபிஷேகம், மாலை 4 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலகாட்சி, இரவு 10 மணிக்கு 1ம் காலம் கற்பக பொன்சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர்வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றது. ஏற்பாடுகள் அனைத்தையும் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் செய்துள்ளார்.