42 அடி உயர வெட்காளியம்மனுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம்!
ADDED :4638 days ago
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, உலக நன்மைக்காக, 42 அடி உயர வெட்காளியம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.தூத்துக்குடிமாவட்டம், எட்டயபுரம், சிந்தலக்கரையில், காளிபராசக்தி தவசித்தர் பீடம் உள்ளது. இதன், 26ம்ஆண்டு, சித்தர் தவபூஜை, இருமுடிமாலை திருவிழா நேற்று துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜைக்குப்பின், உலக அனைத்து உயிர்களின் நன்மை, அமைதி, திருமணத்தடை நீங்கவேண்டி, காலை 9 மணியளவில், அங்குள்ள, 42 அடி உயர வெட்காளியம்மனுக்கு, கோயில் நிர்வாகி ராமமூர்த்தி சுவாமிகள், 108 லிட்டர் பாலாபிஷேகம் செய்தார். ஏராளமான செவ்வாடை பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மும்மத பிரார்த்தனை நடந்தது. மதியம் 2 மணிக்கு, ராமமூர்த்தி சுவாமிகள் தவபூஜைக்கு சென்றார்.