தேவகோட்டை அருகே சாமி சிலை கண்டெடுப்பு!
ADDED :4637 days ago
தேவகோட்டை: தேவகோட்டை அருகே வயலில் ஒரு அடி உயர சாமி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சின்னகோடகுடியைச் சேர்ந்த ராமநாதன், வயலுக்கு சென்ற போது, ஒரு அடி உயரத்தில் கிடந்த உலோகத்தால் ஆன, விநாயகர் சிலையை பார்த்துள்ளார். அவரது தகவல்படி, மண்டல துணை தாசில்தார் நாகநாதன், வருவாய் ஆய்வாளர் சகாயராஜ், வி.ஏ.ஓ., முத்துச்சாமி சிலையை கைப்பற்றி, மாவட்ட தொல் பொருள் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கிராமத்தின் அருகே, புதிய கோயில் கட்டியபோது, பாதாள அறையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிலைகளை, திருடி விற்ற ஒரு கும்பல் போலீசில் சிக்கியது. அந்த கும்பலிடம் இருந்து கைப்பற்றிய சிலைகளில் இதுவும் ஒன்றா, அல்லது வேறு கோயில் சிலையா என, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.