கோட்டை மாரியம்மன் பூச்சொரிதல்: தெருக்கள் தோறும் பூக்கோலம்!
ADDED :4637 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். திருவிழாவின் முதல்நாளான நேற்று முன்தினம் இரவு, கோயில் வளாகத்தில், பூத்தமலர்களால் கோலங்கள் போடப்பட்டிருந்தன. நேற்று வண்ணமிகு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புறப்பட்ட அம்மன் ரதம், நகரின் முக்கிய வீதிகளில் பவனி வந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள், மாரியம்மனை தரிசித்தனர். தெருக்களில் வண்ண பூக்களால் கோலம் போடப்பட்டிருந்தது.