உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உத்சவம் விமரிசை

காஞ்சிபுரம் கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உத்சவம் விமரிசை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், எட்டாம் ஆண்டு வருஷாபிஷேகத்தையொட்டி இன்று, திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது.


காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில், அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அறம்வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த கோவிவில், கிராம மக்கள் சார்பில் புதுப்பிக்கப்பட்டு, 2018ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் வருஷாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, எட்டாம் ஆண்டு வருஷாபிஷேகத்தையொட்டி நேற்று, திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது.


உத்சவத்தையொட்டி, இன்று காலை 8:00 மணிக்கு கோ பூஜையும், தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, மஹா அபிஷேகம், யாகவேள்வி, சங்காபிஷேகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடும், வருஷாபிஷேகமும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு அகத்தீஸ்வரருக்கும், அறம்வளர் நாயகிக்கும் திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் முக்கிய வீதி வழியாக உலா வந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !