திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்கு 81 சவரன் நாகாபரணம் நன்கொடை
ADDED :1 hours ago
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்கு, 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 81 சவரன் தங்கத்தால் ஆன நாகாபரணத்தை, செலானி குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கினர்.
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோவிலுக்கு, நன்கொடையாளர்கள் அவ்வப்போது தங்க, வைர ஆபரணங்கள் உபயமாக வழங்குவர். அந்த வகையில், 650 கிராமில் 81 சவரன் தங்கத்தால் ஆன நாகாபரணத்தை, செலானி குடும்பத்தினர் இன்று, உபயமாக வழங்கினர். அதன் மதிப்பு, 85 லட்சம் ரூபாய். அந்த நாகாபரணத்தை, கோவில் சார்பில் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பெற்று, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில், அறநிலையத் துறை கமிஷனர் வினய், இணை கமிஷனர் அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.