உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி சிவன் கோவில் அன்னதான கூட கட்டுமான பணி துவங்கப்படுமா?

கள்ளக்குறிச்சி சிவன் கோவில் அன்னதான கூட கட்டுமான பணி துவங்கப்படுமா?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அன்னதான கூடம் கட்டமான பணிகள் துவங்கி நிலையிலேயே நிறுத்தப்பட்டிருப்பது பக்தர்களிடம் அதிருப்தி ஏற்படுத்தி வருகிறது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2017 முதல் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஹிந்து கோவில்களில் தினசரி மதிய வேளைகளில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு நாளில் 50 பேர்களுக்கு உணவு வழங்கும் வகையில் இத்திட்டம் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், பரிக்கல் லஷ்மி நரசிம்மர் கோவில், வடக்கனந்தல் உமா மகேஸ்வரி, சின்னசேலம் திரவுபதி அம்மன், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் ஆகிய கோவில்களிலும் தினசரி செயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வயதான முதியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் என தினசரி அன்னதான திட்டத்தில் பயன்பெறுபவர்களின் நலனுக்காக அன்னதான கூடம் கட்டுவதற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. பில்லர்கள் அமைக்கப்பட்டு தரைத்தளம் அமைக்கப்பட்ட நிலையிலேயே என்ன காரணத்தினாலோ, இப்பணிகள் கைவிடப்பட்டது. துவங்கிய நிலையிலேயே நிறுத்தப்பட்ட கோவிலின் அன்னதான கூட பணிகள் குறித்து தினசரி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். எனவே இக்கோவிலின் அன்னதான கூட கட்டுமான பணிகளை துவங்கிடவும், மேலும் இக்கோவிக்கு புதிதாக திருத்தேர் வடிவமைத்து தேரோட்டம் நடத்திடவும், விரைவில் கோவிலில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி, கோபுரங்கள், தரைத்தளங்களை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்திடவும் ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !