திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுத்தம் செய்யும் பணிக்கு புதிய லேடர்
ADDED :1 minutes ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கடத்த வாரம் ரிஷப வாகனத்தின் மீது ஏறி, தீயணைப்பு படையினர், துாய்மை பணி மேற்கொண்டது சர்ச்சையானது. இதற்கு, ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. தொடர்ந்து, துாய்மை பணிக்கு, உரிய கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க தவறிய, கோவில் ஊழியரைபணியிடை நீக்கம் செய்து, கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து கடத்த வாரம் ரிஷப வாகனத்தின் மீது ஏறி சுத்தம் செய்யும் பணியில் நடந்தது போல் இனி நடக்காமல் இருக்க ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வாங்கப்பட்ட புதிதாக லேடர் வாங்கப்பட்டுள்ளது. இதை கோவில் இணை ஆணையர் பரணிதரன் இன்று ஆய்வு செய்தார்.