உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028

கும்பம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028

அவிட்டம்: செயலில் கவனம் தேவை


உங்கள் நட்சத்திர நாதனான செவ்வாய்க்கு ராகு கேது இருவரும் பகைவர்கள் என்றாலும், கோச்சார ரீதியாக அவர்கள் சஞ்சரிக்கும் போது அந்த இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவர்களாகின்றனர். அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 முதல், ராகு ஜென்ம ராசிக்குள்ளும், 3, 4 ம் பாதத்தினருக்கு விரய ஸ்தானமான 12 ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். கேது, அவிட்டம் 1, 2 ம் பாதத்தினருக்கு சப்தம ஸ்தானமான 7 ம் இடத்திலும், 3, 4 ம் பாதத்தினருக்கு ருண, ரோக சத்துரு ஜெய ஸ்தானமான 6 ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்.


நவ. 13 முதல் அவிட்டம் 1, 2 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு முன்னேற்றத்தில் தடைகளையும், தவறான நபர்களின் நட்பினையும், செய்துவரும் தொழிலில் நெருக்கடியையும், ஆரோக்கியத்தில் பாதிப்பையும், எதிர்பாராத இடமாற்றத்தையும், உறவுகளுடன் சங்கடத்தையும், ஆடம்பர ஆசைகளையும் ஏற்படுத்துவார். 3, 4 ம் பாதத்தினருக்கு அதிகபட்சமான செலவினையும், அதற்காக கடன் வாங்கும் நிலையையும் உண்டாக்குவார். எந்த இடத்திலும் நிம்மதி இல்லாமல் போகும். சோதனையும் வேதனையும் அதிகரிக்கும். செய்துவரும் தொழிலை சரியாக செய்ய முடியாத அளவிற்கு சங்கடம் உண்டாகும். பணியாளர்களுக்கு மதிப்பும் ஊதியமும் குறைந்து போகும். 


இந்த நேரத்தில், 1, 2 ம் பாதத்தினருக்கு கேதுவின் 7 ம் இட சஞ்சாரத்தால் தவறான, தகுதி குறைவானவர்களின் நட்பு ஏற்படும். சுய கௌரவத்திற்கும் அந்தஸ்திற்கும் பங்கம் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவு பிரிவு ஏற்படும். உறவினருடன் பகை அதிகரிக்கும். வசிக்கும் ஊரை விட்டு வெளியூர் சென்று வாழவேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும். 3, 4 ம் பாதத்தினருக்கு 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது, இதுவரை இருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். உடலில் ஏற்பட்ட பாதிப்பை விலக்குவார். ஆரோக்கியமாகவும் வேகமாகவும் செயல்பட வைப்பார். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிர்ப்பு, பகை, போட்டி, வம்பு, வழக்கு என்பதை எல்லாம் இல்லாமல் செய்வார். பார்த்துவரும் வேலையில் எதிர்பார்த்த உயர்வையும் மாற்றத்தையும் உண்டாக்குவார். வியாபாரத்தில் வருமானத்தை அதிகரிப்பார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். இழுபறியாக இருந்த வேலைகளை முடிவிற்கு கொண்டு வருவார். வெளிநாட்டு முயற்சிகளை லாபமாக்குவார்.


பொதுப்பலன்

அவிட்டம் 1, 2 ம் பாதத்தினருக்கு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்  சனி பகவானும், 3, 4 ம் பாதத்தினருக்கு ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர். இருவருக்கும், குருப் பார்வைகளும் 3,6,11 ம் இட செவ்வாயின் சஞ்சார காலங்களும், 3,6,10,11 ம் இட சூரியனின் சஞ்சார காலங்களும் முயற்சிகளை வெற்றியாக்கும். முன்னேற்றத்தை உண்டாக்கும். வருமானத்தை அதிகரிக்கும். வசதி வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும்.


தொழில்

செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும். பாதியில் நின்ற வேலைகளையும், மூடி வைக்கப்பட்ட தொழில்களையும் மீண்டும் தொடர முடியும். ரியல் எஸ்டேட். பில்டர்ஸ். மெடிக்கல். கெமிக்கல். உணவகம். இயந்திரத்தொழில். வாகன உற்பத்தி. ஆட்டோ மொபைல்ஸ். டிராவல்ஸ். எலக்ட்ரானிக்ஸ். விவசாயம். பங்கு வர்த்தகம். பேன்சி ஸ்டோர். மினரல் வாட்டர். கூல்டிரிங்ஸ். பெட்ரோலியம். அழகு சாதனங்கள். கற்பித்தல். போதித்தல். வாதாடுதல். பலன் உரைத்தல். சினிமா சார்ந்த தொழில்கள். தொலைக்காட்சி. வலைதளம் தொழில்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள்

கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். நிறுவனத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடி வரும் என்றாலும், சுய ஒழுக்கத்திலும் எதிர்பாலினர் நட்பிலும் ஒரு எல்லைக்குள் இருப்பது அவசியம். இல்லையெனில் அதன் காரணமாக வேலையில் சங்கடங்களையும் இழப்பையும் சந்திக்க வேண்டிவரும்.


பெண்கள்

உடலிலும் மனதிலும் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வேலைப் பார்க்கும் இடத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும் என்றாலும், குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்க வேண்டிய காலம் இது. உங்கள் ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம். புதியவர்கள் கூறும் ஆலோசனைகளையும் ஏற்க வேண்டாம். எந்த ஒன்றாக இருந்தாலும் அதை உங்கள் கணவரிடம் சொல்லிவிட்டு அவருடைய உதவியுடன் செய்து கொள்வது வாழ்க்கைக்கு நன்மைதரும். குடும்பத்தில் நிம்மதியான நிலைக்கு வழிவகுக்கும்.


கல்வி

படிப்பின்மீது ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள  ஆலோசனைகளை ஏற்பீர்கள். வாழ்க்கையின் உயர்வுக்கு கல்விதான் அடிப்படை என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள்.


உடல்நிலை

ஆரோக்கியத்தில் பின்னடைவு, தொடர்ந்து மருத்துவச்செலவு என்றிருந்த நிலைமாறும். தொற்றுநோய், பரம்பரை நோய், விபத்து என உங்களுக்குண்டான சங்கடங்கள் விலகும். மருத்துவ சிகிச்சையின் காரணமாக ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள்.


குடும்பம்

குடும்ப நலனையும் கௌரவத்தையும் மனதில் கொண்டு தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச்செல்வது நன்மையளிக்கும். நம் குடும்பம், நம் துணை, நம் பிள்ளைகள் என்ற எண்ணத்தோடு செயல்படும்போது வாழ்க்கையில், குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். வீடு வாகனம் பொன் பொருள் என்ற கனவு நனவாகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.


பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட்டுவர வாழ்வில் நன்மை உண்டாகும்.


சதயம்: செல்வாக்கு உயரும்


நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு,  இதுவரை உங்கள் ராசிக்குள் சஞ்சரித்து போராட்டத்தையும  நெருக்கடியையும் ஏற்படுத்தி வந்த ராகு, நவ. 13 முதல் 12 ம் இடமான விரய ஸ்தானத்திலும், 7 ம் இடத்தில் சஞ்சரித்து குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையினையும், பிரச்னைகளையும், தவறான நட்பினால் அவமானங்களையும் உண்டாக்கி வந்த கேது, 6 ம் இடமான சத்துரு ஜெய ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.


விரய ஸ்தானம் என்னும் 12 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் இதற்குமுன் இருந்த நெருக்கடியான நிலைமாறும். எதிர்பார்த்து நிறைவேறாமல்போன வேலைகள் முடிவிற்குவரும். நீண்டநாள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். முன்பைவிட உடல்நிலை இப்போது சிறப்பாகும். நீங்கள் எதிர்நோக்கியுள்ள வழக்குகளில் சாதகமான தீர்ப்புவரும். சிலருக்கு செய்துவரும் தொழிலில் சின்னச்சின்ன தடைகள் இருக்கும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவு உண்டாகும். முக்கியமான பயணங்கள் உங்களுடைய அஜாக்கிரதையால் தடைபடும். அவசரத்தேவை என்று வரும்போது உறவினரின் உதவி கிடைக்கும். வீண் பிரச்னை, அலைச்சல் என்று அவ்வப்போது ஏற்பட்டு மனதை சங்கடப்படுத்தும். கணவன் மனைவிக்குள் மனதளவில் வருத்தம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் இக்காலத்தில் பொறுமையுடன் இருப்பதும், சிந்தித்து செயல்படுவதும் வெற்றியை உண்டாக்கும்.


ஞான மோட்சக்காரகன் கேது 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால், உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். வெற்றிமேல் வெற்றி ஏற்படும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். ஆரோக்கியமாக நடை போடக்கூடிய நிலை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலைத் தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். சொந்தமாக தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவு செய்து லாபம் காண முடியும். வங்கியில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். தொழிலுக்காக எடுக்கின்ற முயற்சி அனைத்தும் வெற்றியாகும். போட்டியாளர்கள் தொல்லை விலகும். வழக்கு விவகாரம் ஜெயமாகும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.  விரோதிகளும், மறைமுகமாக தொல்லை அளித்து வந்தவர்களும், உங்களைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றவர்களும் உங்களைவிட்டு விலகுவர். குடும்பத்தில் நிம்மதியும், ஆடை ஆபரணங்களுடன் நவீன வசதிகளும் உண்டாகும். சிலர் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். வெளிநாட்டிற்கு செல்ல விரும்புகிறவர்களுக்கு அரசாங்கத்தின  அனுமதிக்கிடைக்கும். எதிலும் லாபம் சேமிப்பு உயர்வு என்று உங்கள் நிலை உயரும்.


பொதுப்பலன்

சிம்ம குருவின் சஞ்சாரமும், சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும், 3, 6, 11 ம் இட செவ்வாய், 3, 6, 10, 11 ம் இட சூரியன் சஞ்சாரங்களும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும். நினைத்ததை சாதிக்க வைக்கும். இதுவரை இருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்யும். வியாபாரம் தொழிலில் வளர்ச்சியை ஏற்படுத்தும். வருமானம் உயரும். செல்வாக்கும் அந்தஸ்தும் மேம்படும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வரவு அதிகரிக்கும்.


தொழில்

வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். போட்டியாளர்கள் உங்கள் பாதையில் இருந்து விலகுவர். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதியும் உதவியும் கிடைக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் தேடி வரும். விவசாயம் சார்ந்த தொழில்கள். பேக்கரி. உணவகம். பிரிக்ஸ். கட்டுமான பொருட்கள். ரியல் எஸ்டேட் பில்டர்ஸ். மருந்தகம். வாகன உற்பத்தி, விற்பனை. ஆட்டோமொபைல்ஸ். எலக்ட்ரானிக்ஸ். கம்ப்யூட்டர். ஆன்லைன் வர்த்தகம். ட்ரான்ஸ்போர்ட்.  எக்ஸ்போர்ட் தொழில்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள்

நேரமும் காலமும் சாதகமாக இருப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும்.


பெண்கள்

இதுவரை இருந்த பிரச்னைகள் போராட்டங்கள் முடிவிற்கு வரும். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். படிப்பு, வேலை, திருமணம் என்ற அவரவரின் கனவு நனவாகும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலை மற்றும் தொழிலில் எதிரிகள் தொல்லை விலகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.


கல்வி

ஜென்ம ராசியை விட்டு ராகுவும், சப்தம ஸ்தானத்தை விட்டு கேதுவும் விலகுவதுடன் ராசிக்கு குருப்பார்வையும் உண்டாவதால் மனம் நேர்வழியில் செல்லும். தவறான நண்பர்களை விட்டு விலகுவீர்கள். ஆசிரியர்கள் ஆலோசனைகள் ஏற்பீர்கள். படிப்பின்மீது அக்கறை அதிகரிக்கும்.


உடல்நிலை

ருண ரோக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் மருத்துவச்செலவுகள் குறையும். ஆரோக்கியம் மேம்படும். பரம்பரை நோய், ரகசிய நோய், தொற்று நோய் என்று அவதிப்பட்டு வந்த நிலை மாறும். சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள்.


குடும்பம்

சப்தம ஸ்தானத்தை விட்டு கேதுவும், ஜென்ம ராசியை விட்டு ராகுவும் விலகி இருப்பதுடன் ராசிக்கு குருப்பார்வையும் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். அந்நியரால் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். பொருளாதார நெருக்கடி நீங்கும். வீடு வாகனம் பொன் பொருள் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.


பரிகாரம்: தில்லை காளியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். சங்கடங்கள் விலகும்.


பூரட்டாதி: கனவு நனவாகும்


நவ. 13. 2026 அன்று நடைபெற இருக்கும் ராகு கேது பெயர்ச்சியில், 1, 2, 3 ம் பாதத்தினருக்கு ராகு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், வாழ்க்கை வளமாகும். வீண் செலவுகள் கட்டுப்படும். நினைத்ததை சாதிக்க முடியும். தவறான வழியில் சென்றவர்களும் இனி சரியான வழியில் செல்லக்கூடிய நிலை உண்டாகும். நினைப்பது நடந்தேறும் என்றாலும், செலவுகள் பல மடங்கு அதிகரிக்கும். வீடு வாகனம் ஆடம்பரம் என்று பலவகையிலும் கையிருப்பு கரையும். கடனாக கொடுத்த பணம் திரும்ப வராமல் இழுபறியாக இருக்கும். உடல் நிலையிலும் அவ்வப்போது சிறு சிறு சங்கடங்கள் உண்டாகும். 4 ம் பாதத்தினருக்கு, லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் வரவேண்டிய பணம்வரும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 


இக்காலத்தில், ஞான மோட்சக்காரகன் கேது, 1, 2, 3 ம் பாதத்தினருக்கு 6 ம் இடமான, ருண ரோக சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். பிரச்னைகள், போட்டிகள் விலகும். பிறரை நம்பி செயல்பட்டு வந்த நீங்கள் இனி சுயமாக செயல்படத் தொடங்குவீர்கள். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதியான வேலைக் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். 4 ம் பாதத்தினருக்கு, பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், உறவினருடன் மனக்கசப்பு, சொத்து விவகாரத்தில் பிரச்னை, பிள்ளைகளால் சோதனை, நெருக்கடி, சிலருக்கு எதிர் பாலினரின் நட்பு, சந்தோசம், அதனால் சமூகத்தில் அவமானம், மரியாதை இழப்பு உண்டாகும். சிலர் மன நிம்மதிக்காக கோயில் கோயிலாக சென்று வருவீர்கள்.


பொதுப்பலன்

பூரட்டாதி 1, 2, 3 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, 6 ம் இட கேதுவும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தான ராகுவும், இருவருக்கும், குருப் பார்வைகளும், 3, 6, 11ம் இட செவ்வாய் , 3, 6, 10, 11 ம் இட சூரியனின் சஞ்சாரங்களும் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். நினைத்த காரியங்களை நடத்தி வைக்கும். வருமானத்தை அதிகரிக்கும். செல்வம் செல்வாக்கு அந்தஸ்தை உயர்த்தும். வேலையில் முன்னேற்றத்தையும், தொழிலில் வருமானத்தையும் ஏற்படுத்தும். இதுவரை வாழ்க்கையில் இருந்த நெருக்கடிகள் எல்லாம் இக்காலத்தில் இல்லாமல் போகும்.


தொழில்

மன உளைச்சலாலும், எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போனதாலும் இதுவரை எந்தவொரு வேலையிலும் முழுமையாக ஈடுபடாமல் இருந்த உங்களுக்கு, இக்காலத்தில் செய்துவரும் தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வாகன உற்பத்தி. ஆட்டோ மொபைல்ஸ். எலக்ட்ரானிக்ஸ். கம்ப்யூட்டர். டிராவல்ஸ். ஆன்லைன் வர்த்தகம். விவசாயம் சார்ந்த பொருட்கள். ஜூவல்லரி. ரியல் எஸ்டேட். பில்டர்ஸ். ஷேர் மார்க்கெட் தொழில்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள்

வேலையில் இருந்த போராட்டநிலை மாறும். உங்கள் திறமைக்கும் தகுதிக்கும் மதிப்புண்டாகும். சிலர் இருக்கும் இடத்தைவிட்டு வேறு இடத்திற்கு மாறுவீர்கள். எதிர்பார்த்த ஊதியமும் சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்குவரும். கிடைக்க வேண்டிய சலுகைகளும் விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைக்கும்.


பெண்கள்

மனதில் சஞ்சலமும் குழப்பமும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நன்மையளிக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர வேண்டாம். வெளிவட்டாரத்தில் என்ன நடந்தாலும் அதை வாழ்க்கைத்துணையுடன் பகிர்ந்து கொண்டு முடிவிற்கு வருவது நன்மையளிக்கும். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு காதலும் உண்டாகும். வேலையில்  இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.


கல்வி

படிப்பில் அக்கறை உண்டாகும். எதிர்வரும் பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்கல்விக்காக சிலர் வெளிநாடும் செல்வீர்கள். குடும்பத்தினர் உங்களைப் பாராட்டுவர்.


உடல்நிலை

உடல்நிலையில் ஏதேனும் ஒரு சங்கடம் என்ற நிலையுடன் வாழ்ந்து வந்த உங்களுக்கு இக்காலத்தில் அதில் மாற்றம் ஏற்படும். மருத்துவச்செலவுகள் குறையும். ஆரோக்கியமாக நடை போடக்கூடிய நிலை உண்டாகும்.


குடும்பம்

வருமானம் அதிகரிப்பதுடன், செல்வாக்கும் உயரப் போவதால் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். புதிய இடம் வீடு வாகனம் என்ற நீண்ட நாள் கனவு நனவாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை ஏற்படும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.


பரிகாரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மையும் மேன்மையும் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !