கூடலுார் சுந்தரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழா பச்சை சாற்றி தரிசனம்
ADDED :25 minutes ago
கூடலுார்: கூடலுார் சுந்தரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி 3ம் நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு துளசி, மருது, மரிக்கொழுந்து, வில்வம், பன்னீர், மனோரஞ்சிதம் உள்ளிட்ட பச்சை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பச்சை சாற்றி நிகழ்வினை கட்டளைதாரர்கள் கிரிதரன், லோகநாயகி, மித்ரன் செய்திருந்தனர். சுருளிமலை பழநி மலை பாதயாத்திரை குழுவினர் பஜனை பாடல்கள் பாடினர். பிரசாதம் வழங்கப்பட்டது.