உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் சிங்க முகன் சம்ஹாரம்

கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் சிங்க முகன் சம்ஹாரம்

புதுச்சேரி: புதுச்சேரி, கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிங்க முகன் சம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.


புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே செல்வ விநாயகர், வீரபாகு தேவர், வள்ளி தெய்வானை உடனுறை கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 74வது ஆண்டு கந்தர் சஷ்டி சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவம் கடந்த 10ம் தேதி துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக, நேற்று வேல் வாங்குதல், சிங்க முகன் சம்ஹாரம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹார விழா நடக்கிறது. வரும் 16ம் தேதி காலை 9:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம், 20ம் தேதி வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் இரவு 8:00 மணிக்கு தெப்ப உற்சவம், 27ம் தேதி இரவு 8:00 மணிக்கு சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !