உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்ப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ஐயப்ப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

நெகமம்: செங்குட்டைப்பாளையம், ஐயப்பசுவாமி கோவில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

நெகமம், செங்குட்டைப்பாளையம் கன்னிமூல கணபதி, பாலமுருகன், ஐயப்பசுவாமி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த 12ம் தேதி, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்கியது.

13ம் தேதி, சாந்தி ஹோமம், தச தரிசனம், கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜை நடந்தது.

14ம் தேதி, விசேஷ சந்தி, இரண்டாம் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மூன்றாம் கால யாக பூஜை, கோபுர கலச ஸ்தாபனம், பிம்பசுத்தி, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

நேற்று, நான்காம் கால யாக பூஜை, கோ பூஜை, கடம் புறப்பாடு, விமானங்கள் மற்றும் மூல ஸ்தாபனம், பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது.

இதில், பந்தளராஜா சங்கர் வர்மா மற்றும் சபரிமலை முன்னாள் மேல்சாந்தி சசி நம்பூதிரி மற்றும் செங்குட்டைபாளையம் சுற்று வட்டார கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதை தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !