உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குச்சிபாளையம் பாலமுருகன் கோவிலில் கொடிமரம் கும்பாபிஷேக விழா

குச்சிபாளையம் பாலமுருகன் கோவிலில் கொடிமரம் கும்பாபிஷேக விழா

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வட குச்சிபாளையம் பாலமுருகன் கோவிலில் கொடிமரம் கும்பாபிஷேக விழா நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த வட குச்சிபாளையம் பாலமுருகன் கோவிலில் உள்ள கொடிமரம் கிராம பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டது. அதன் கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 14ஆம் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 8 15 மணிக்கு இரண்டாம் பாலா யாகசாலை பூஜை முடிந்து கடம் புறப்பாடகி காலை 8. 35 மணிக்கு கொடிமரத்திற்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மாலையில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சூரசம்ஹார பூஜை நடைபெற்றது. கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !