உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கோலாகலமாக நிறைவடைந்த சத் பூஜை! விரதம் முடித்த பக்தர்கள்!

உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கோலாகலமாக நிறைவடைந்த சத் பூஜை! விரதம் முடித்த பக்தர்கள்!

பீஹார், உத்தர பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் 4 நாள் சத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. விழாவின் முக்கிய நாட்களில் பக்தர்கள் ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள். மாலையில் மறையும் சூரியனுக்கும், மறுநாள் அதிகாலையில் உதிக்கும் சூரியனுக்கும் வழிபாடு நடத்துவார்கள்.


நான்கு நாட்கள் நடைபெறும் புகழ்பெற்ற சத் பூஜையின் நிறைவு நாளான இன்று, அதிகாலையில் உதய சூரியனுக்கு அர்க்யம் செலுத்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர். பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சத் பூஜை படித்துறைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். பாட்னாவில் உள்ள பஞ்சமுகி கோயிலிலும் பக்தர்கள் உதய சூரியனை வழிபட்டு, சத் பூஜை பிரசாதங்களை வழங்கினர். விரதம் இருந்த பெண்கள் மற்றும் பக்தர்கள் சூரிய பகவானுக்கு அர்க்யம் செலுத்தி, பிரசாதம் ஏற்றுக்கொண்டு நான்கு நாள் விரதத்தை நிறைவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !