உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சண்டிகரில் சத் பூஜை கோலாகலம்: செக்டர் 42 ஏரியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சூரிய வழிபாடு!

சண்டிகரில் சத் பூஜை கோலாகலம்: செக்டர் 42 ஏரியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சூரிய வழிபாடு!

சண்டிகர்: சத் பூஜையை முன்னிட்டு சண்டிகர் செக்டர் 42 ஏரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சூரிய பகவானுக்கு வழிபாடு நடத்தினர். குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பாரம்பரிய உடையணிந்து, பழங்கள், கரும்பு, தேகுவா உள்ளிட்ட படையல் பொருட்களுடன் ஏரிக்கரையில் குவிந்தனர். நீரில் இடுப்பளவு நின்று, மறையும் சூரியனுக்கு அர்க்யம் செலுத்தி குடும்ப நலன், ஆரோக்கியம், செழிப்பு வேண்டி பிரார்த்தனை செய்தனர். சத் மாதா பக்திப் பாடல்களும் மந்திரங்களும் ஏரிக்கரையை பக்தி மயமாக்கின. சூரிய பகவான் மற்றும் சஷ்டி தேவியை வழிபடும் இவ்விழா, 36 மணி நேரம் உணவு, தண்ணீர் இன்றி கடைப்பிடிக்கப்படும் கடினமான விரதமாகும். கார்த்திகை மாத சத் பூஜை மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.


2016-ம் ஆண்டு முதல் பூர்வாஞ்சல் யுவ சேவா சமிதி சார்பில் இவ்விழா நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்களின் வசதிக்காக ஏரியைச் சுத்தம் செய்தல், மின்விளக்கு, பாதுகாப்பு, வாகன நிறுத்தம் உள்ளிட்ட ஏற்பாடுகளை சண்டிகர் நிர்வாகம் செய்திருந்தது. மறுநாள் அதிகாலை உதய சூரியனுக்கு அர்க்யம் செலுத்தி விரதத்தை நிறைவு செய்வதற்காக பக்தர்கள் தயாரானார்கள். நகரின் பல்வேறு பகுதிகளிலும் சத் பூஜை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !