காஞ்சி பழனி முருகன் கோவிலில் ஊஞ்சல் உத்சவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு
ADDED :14 minutes ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பழனி முருகன் கோவிலில், நேற்று நடந்த ஊஞ்சல் சேவை உத்சவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெற்றது.
காஞ்சிபுரம் நெமந்தகார தெருவில் உள்ள பழனி முருகன் கோவிலில் கடந்த 9ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதில், தினமும் மாலை முருகன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார். தொடர்ந்து சூரர்களை வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. இதில், ஏழாவது நாள் உத்சவமான கடந்த 15ம் தேதி சூரசம்ஹாரமும், எட்டாவது நாளான நேற்று முன்தினம் முருகன், தெய்வானை திருக்கல்யாண உத்சவமும் நடந்தது. இதில், கந்த சஷ்டி நிறைவு நாளான நேற்று காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உத்சவமும் நடந்தது. இதில், வள்ளி தெய்வானையருடன் முருகன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.