அரியாங்குப்பம் சொர்ணா பைரவர் கோவிலில் அஷ்டமி சிறப்பு பூஜை
ADDED :12 minutes ago
அரியாங்குப்பம்: சொர்ணா பைரவர் கோவிலில், அஷ்டமியையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அரியாங்குப்பம் அடுத்த நாணமேட்டில் சொர்ணா பைரவர் கோவில் உள்ளது. இங்க, வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள், ஹோமம் மற்றும் யாகம் நடைபெற்று வருகிறது. நேற்று அஷ்டமியையொட்டி, மாலை பைரவருக்கு ஹோமம் மற்றும் அபிேஷகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.