கோலாகலமாக நடந்த கோ பூஜை பக்தி பரவசத்துடன் வழிபாடு
திருப்பூர்: அஷ்டமி திதியில் கோபாஷ்டமி விழாவை கொண்டாடும் வகையில், கோ–சேவா சமிதியினர் திருப்பூர் கோட்டம் முழுதும், ஆயிரத்து, 208 இடங்களில் பாரம்பரியமான நாட்டு இன பசுக்களை வைத்து கோ பூஜை நேற்று நடத்தினர். இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்று வழிபட்டனர். நிறைவு நிகழ்ச்சி, திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே கோட்டை ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் மாலை நடந்தது. ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து கோ சேவா சமிதியினர் கூறியதாவது: திருப்பூரில் ஐந்தாம் ஆண்டாக கோபாஷ்டமி கோலகலமாக நடைபெற்றது. அதில், திருப்பூர் நகர், 53, அவிநாசி, 152, பெருமாநல்லுார், 170, ஊத்துக்குளி, 92, பொங்கலுார், 106, செஞ்சேரி, 164, பல்லடம், 121, தாராபுரம், 215 மற்றும் காங்கயம், 135 என, மொத்தம், ஆயிரத்து, 208 இடங்களில் கோ பூஜையில், 3,740 நாட்டு பசுகளை வழிபட்டனர். இவ்வாறு, அவர்கள் கூறினார்.