வார ராசி பலன்: இந்த வாரம் எப்படி இருக்கும்.. 12 ராசிகளுக்கான பலனும்.. வழிபட வேண்டிய தெய்வமும்!
மேஷம்:ஆபத்சகாயேசுவரரை வழிபட நன்மை உண்டாகும். சுகஸ்தான கேதுவால் உடல்நிலையில் சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். உழைப்பு அதிகரிக்கும். பூர்வ புண்ணிய குருவால் மனதில் இருந்த குழப்பம் விலகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
ரிஷபம்:சக்கரத்தாழ்வாரை வழிபட சங்கடங்கள் விலகி நன்மை உண்டாகும். சப்தம ஸ்தானத்தில் ஆத்ம காரகன் சூரியன் சஞ்சரிப்பதால் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். சிலர் பழைய வீட்டில் இருந்து வசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். எடுக்கும் வேலைகளில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியையும், உடன் பணிபுரிபவர்களையும் அனுசரித்துச் செல்வது அவசியம்.
மிதுனம்:சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். குடும்பம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
கடகம்: விநாயகரை வழிபட சங்கடங்கள் விலகும். தன, குடும்ப ஸ்தான குருவால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். சொந்த இடம் வீடு என்ற கனவு நனவாகும். பொருளாதார நிலை உயரும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.
சிம்மம்:ஆபத் சகாயேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும். ராசியை விட்டு கேது விலகி விட்டதால் உங்களுக்கேற்பட்ட நெருக்கடி நீங்கும். உடன் இருந்தவர்களின் சுயரூபம் தெரியவரும். குடும்பத்திலும் தொழிலிலும் குழப்பத்தை உண்டாக்கி வந்தவர்கள் விலகிச்செல்வர். வியாபாரம், தொழில் வளர்ச்சி அடையும். வருமானம் கூடும். வெள்ளிக்கிழமை கவனமாக செயல்படுவது அவசியம்.
கன்னி:தர்பாரண்யேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும். எதிர்ப்பு விலகும். சகாய சூரியனால் உங்கள் செல்வாக்கு உயரும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். குடும்பம், தொழில், வருமானத்தில் கவனம் செல்லும். செயல்களில் வேகம் இருக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை அனைத்திலும் நிதானம் தேவை.
துலாம்:இராமநாத சுவாமியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு செவ்வாயால் வருமானம் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எதிர்ப்பு, போட்டி, பகை என்றிருந்த நிலை மாறும். வியாபாரம் தொழிலில் கவனம் செல்லும். எடுக்கும் முயற்சியில் வெற்றியுண்டாகும். செவ்வாய்க்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையளிக்கும்.
விருச்சிகம்:வைத்தியநாத சுவாமியை வழிபட சங்கடங்கள் நீங்கும். பத்தாமிட குருவின் பார்வைகளால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கையில் பணம் புரளும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். நெருக்கடிகள் நீங்கும். வியாபாரம் தொழிலில் நிம்மதியான நிலை உண்டாகும். புதிய முயற்சியும், முதலீடும் லாபம்தரும். வியாழக்கிழமை உங்கள் வேலைகளில் நிதானம் தேவை.
தனுசு:அக்னீஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். அஷ்டம ஸ்தானத்தில் கேது, தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் உங்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் என்றாலும், பாக்கிய குருவின் பார்வைகளால் அவை எல்லாம் உங்களை நெருங்காமல் போகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். வேலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
மகரம்:வாஞ்சிநாதரை வழிபட சங்கடங்கள் விலகும். எடுத்த வேலை வெற்றியாகும். லாப ஸ்தான சூரியனால் வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
கும்பம்: மகாலிங்க சுவாமியை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும். சப்தம செவ்வாய் குருவால் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரம் தொழிலில் போட்டியாளர் தொல்லை விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். கையில் பணம் புரளும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். தவறானவர்கள் உங்களை விட்டு விலகுவர். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.
மீனம்:பைரவரை வழிபட சங்கடங்கள் விலகி நன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் குருவின் பார்வைகளால் குடும்பம், தொழில் வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரம் வளர்ச்சி அடையும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வீண் செலவுள் குறையும். கையில் பணம் புரளும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.
முழுபலன் அறிய கிளிக் செய்யவும்.. https://temple.dinamalar.com/