உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு வைபவத்தில், நேற்று ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.


திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில், மூலவர் ஆதிபுரீஸ்வரர் புற்று வடிவில் காட்சி தருகிறார். இது, ஆண்டு முழுதும், தங்க முலாம் பூசிய நாக கவசம் அணிவிக்கப்பட்டு இருக்கும். ஆண்டுக்கொரு முறை, கார்த்திகை தீபத்தையொட்டி மூன்று நாட்கள் மட்டும் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறக்கப்பட்டு, புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடக்கும். அதன்படி, நேற்று மாலை 6:30 மணிக்கு, நவ தீபங்கள் ஒளியில், ஆதிபுரீஸ்வரர் தங்க கவசம் திறக்கப்பட்டு, தைலாபிஷேகம் வைபவம் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 26ம் தேதி இரவு 9:00 மணி வரை, ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்கலாம். இந்த வைபவத்திற்கான ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் நற்சோணை மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !