மாலை 6 மணிக்கு சாப்பிடாதீர்!
ADDED :5013 days ago
கருக்கல் வேளை வந்திருச்சு! இப்போது சாப்பிடாதே, வாசல்படியில் உட்காராதே என்று அக்கால பெரியவர்கள் சொல்வார்கள். ஏன் தெரியுமா? மாலை 6 மணிக்குத்தான், நரசிம்மரால் வதம் செய்யப்பட்டான் இரணியன். அவனை மேலே எங்கேயும் வைத்துக் கொல்ல முடியாது, கீழே நல்ல இடங்களில் வைத்தும் கொல்லமுடியாது. எனவே இரண்டும் கெட்டானாக வாசல்படிக்கு தூக்கி வந்து அமர்ந்த நரசிம்மர், வயிற்றைக் கிழித்து குடலை சாப்பிட ஆரம்பித்து விட்டார். சர்வ சாதுவான ஸ்ரீமன் நாராயணனே, இப்படி செய்கிறார் என்றால், அவருக்கு எவ்வளவு கோபம் இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. இந்த காரணத்தால், மாலையில் சாப்பிடும் உணவு நர மாமிசத்துக்கு சமமாகக் கருதப்படுகிறது. வாசல்படியில் உட்கார்ந்தால் ஆயுள் குறையும் என்பது ஒரு கருத்து.