பெற்றோருக்கு பாத பூஜை செய்த மாணவர்கள்!
ADDED :4676 days ago
ஆனைமலை: ஆனைமலை அருகே சோமந்துறை சித்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பெற்றோர்களுக்கான பாத பூஜை விழா நடந்தது. தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். மாணவர்கள் பெற்றோர்களை மதிக்கவும், பெற்றோர்களிடம் அன்பு செலுத்தவும், தெய்வமாக வழிபட வேண்டியவர்கள் என்பதை உணர்த்த இவ்விழா நடந்தது. இதில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்கள் அவர்களுடையை பெற்றோர்களின் பாதங்களை கழுவி, ஆசீர்வாதம் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.