உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்மாவதி தாயார் கோவிலுக்கு தங்க காசு மாலை காணிக்கை!

பத்மாவதி தாயார் கோவிலுக்கு தங்க காசு மாலை காணிக்கை!

நகரி: திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு, சென்னையை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர், 610 கிராம் எடையுள்ள, தங்க காசு மாலையை காணிக்கையாக வழங்கினார். கோவிலில், மூலவர் அலமேலு மங்கை தாயார், உற்சவ சேவையில் எழுந்தருளும், பத்மாவதி தாயார் அணிவிப்பதற்காக, 60 லட்சுமி உருவம் பொறித்த, இந்த காசு மாலையை, திருச்சானூர் கோவில் நிர்வாக அதிகாரி வேணுகோபாலிடம் வழங்கினார்.காசு மாலையின் மதிப்பு, 19 லட்சம் ரூபாய் என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி, சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !