பாட்னா: உலகின் மிக உயரமான, 70 அடி உயர காந்தி சிலை, நேற்று பீகார் மாநிலம் பாட்னாவில் திறக்கப்பட்டது. மாநிலத்தின் ஐக்கிய ஜனதா தளம் முதல்வர் நிதிஷ்குமார், சிலையை திறந்து வைத்தார். பாட்னாவில் உள்ள, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காந்தி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள, இந்த வெண்கல சிலையின் இரு பக்கமும், இரண்டு குழந்தைகள் உள்ளன. பீகார் மாநில அரசு வழங்கிய, 10 கோடி ரூபாயில், டில்லியை சேர்ந்த சிற்ப கலைஞர்கள் ராம்சுதர் மற்றும் அவரது மகன்கள் இந்த சிலையை வடிவமைத்துள்ளனர். பார்லிமன்டில் உள்ள, 16 அடி உயர காந்தி சிலையே இதுவரை, மிக உயரமான காந்தி சிலையாக இருந்தது. தற்போது, 70 அடி உயர சிலை நிறுவப்பட்டுள்ளதால், பார்லிமன்டில் உள்ள காந்தி சிலை இரண்டாவது பெரிய சிலை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.