உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநீர்மலையில் ரதசப்தமி கோலாகலம்!

திருநீர்மலையில் ரதசப்தமி கோலாகலம்!

தாம்பரம்: திருநீர்மலை பெருமாள் கோவிலில், ரதசப்தமி திருவிழா நடந்தது. தாம்பரத்தை அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், ரதசப்தமி திருவிழா, நேற்று நடந்தது.  இதன் ஒரு பகுதியாக, காலை, 6:00 மணிக்கு,  சூரியபிரபை நடந்தது. 8:00 மணிக்கு அனுமந்த  வாகனமும், 10:00 மணிக்கு கருட வாகன சேவையும் நடைபெற்றது. பகல், 12:00 மணிக்கு சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். மதியம், 1:00  மணிக்கு திருமஞ்சனம் மற்றும் கீர்த்தவாரி நடந்தது.  பிற்பகல், 3:00 மணிக்கு குதிரை வாகன புறப்பாடும், சிம்ம வாகன புறப்படும், இரவு, 7:00 மணிக்கு சந்திரபிரபை புறப்பாடும் நடந்தது.  இதில், ஐந்தாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !