உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நந்தியடி சுவாமிக்கு குரு பூஜை விழா

நந்தியடி சுவாமிக்கு குரு பூஜை விழா

புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டம் வெள்ளாழங் குப்பத்தில் வள்ளி தேவசேனா சுப்ரமணிய சுவாமி கோவிலில் நந்தியடி சுவாமிக்கு 85வது ஆண்டு குரு பூஜை மகா உற்சவம் நடந்தது. உற்சவத்தை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு நந்தியடி சுவாமிகளில் திருவடி பூஜையும், பகல் 12.30 மணிக்கு நைமித்திய மகேஸ்வர பூஜையும் நடந்தது.  குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நந்தியடி சுவாமி பக்தர்கள், வெள்ளாழங்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !