27ம் ஆண்டு கல்யாண உற்சவம்
ADDED :4616 days ago
கடலூர்: கடலூர், புதுப்பாளையத்தில் ராதா கல்யாண உற்சவம் நடந்தது. பக்த பஜனை மண்டலி சார்பில் 27ம் ஆண்டு ராதா கல்யாண உற்சவம் கடலூர், புதுப்பாளையத்தில் உள்ள குமரன் மகாலில் நேற்று முன்தினம் துவங்கியது. அதனையொட்டி அன்றைய தினம் காலை 8 மணிக்கு கணபதி பூஜை, 9 மணிக்கு அஸ்டபதி பஜனை, மாலை 6 மணிக்கு கிருஷ்ணர் வீதியுலா, 7 மணிக்கு நிச்சயதார்த்தம், திவ்ய நாம பஜனை நடந்தது.
நேற்று காலை 7 மணிக்கு பஜனை ஊர்வலம் நடந்தது. 10.30 மணி முதல் 12 மணிக்குள் சாய் பிரசாத் குழுவினரால் ராதா கல்யாண உற்சவம் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.