வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ரதசப்தமி விழா
ADDED :4616 days ago
விழுப்புரம்: வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ரதசப்தமியையொட்டி ஏழு அலங்காரத்தில் உற்சவர் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழுப்புரத்தில் உள்ள வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ரதசப்தமி மஹோத்சவ உற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி காலை 5 மணிக்கு மூலவர் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் உற்சவர் பெருமாள் சூரிய பிரபை அலங்காரம், அனுமந்த வாகன அலங்காரம், சேஷ வாகன அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு கருடசேவை அலங்காரம், மாலை 4 மணிக்கு யானை வாகன அலங்காரம், 5.30 மணிக்கு கற்பக விருட்சம் அலங்காரமும், இரவு 7 மணிக்கு சந்திர பிரபை உள்ளிட்ட ஏழு அலங்காரங்கள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் உலா நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.