உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐந்து கோவில்களில் உஞ்சவ்ருத்தி நிகழ்ச்சி

ஐந்து கோவில்களில் உஞ்சவ்ருத்தி நிகழ்ச்சி

புதுச்சேரி: பாண்டுரங்க பஜன் சமாஜ் சார்பில், ஐந்து கோவில்களில் நேற்று உஞ்சவ்ருத்தி நிகழ்ச்சி  நடந்தது. பாண்டுரங்க பஜன் சமாஜ் சார்பில், போலகம் ஸ்ரீ விஜயகோபால யதிஸ்வாமிகள் ஆராதனை உற்சவம், கடந்த 15 ம்தேதி துவங்கி வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு, நேற்று புதுச்சேரியில் 5 கோவில்களில் உஞ்சவ்ருத்தி விமர்சையாக நடந்தது. ரெயின்போ நகர் சுமுக விநாயகர் கோவிலில் காலை 8 மணி முதல் 8.30 மணி வரை, பிருந்தாவனம், ஸ்ரீ சதானந்த விநாயகர் கோவிலில் காலை 8.45 மணி முதல் 9.15 மணி வரை, ராஜாஜி நகர், ராஜகணபதி கோவிலில், 9.30 மணி முதல் 10 மணி வரை உஞ்சவ்ருத்தி நடந்தது. லாஸ்பேட்டை குறிஞ்சி நகர், வலம்புரி ஞான விநாயகர் கோவிலில் காலை 10.15 மணி முதல் 10.45 மணி வரை, எல்லப்பிள்ளைச்சாவடி,  சாரதாம்பாள் கோவிலில் 11 மணி முதல் 12 மணி வரை  உஞ்சவ்ருத்தி நிகழ்ச்சி நடந்தது.
பாகவதர்கள் துரை, சீத்தாராம், ஞானசேகர் , சீனிவாசராவ், சத்தியமூர்த்தி, தேவநாதன், சுதர்சனம் உள்பட உள்ளூர் பாகவதர்கள் பலரும் பாடினர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பாண்டுரங்க பஜன் சமாஜ் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !