உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

காரைக்கால்: காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலின் பிரமோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினந்தோறும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் சந்திர பிரபையில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று சேஷ வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடந்தது. இன்று கருட வாகனத்திலும், நாளை 19ம் தேதி அனுமந்த் வாகனத்திலும், 20ம் தேதி சிம்ம வாகனத்தில்  பெருமாள் புறப்பாடு நடக்கிறது. 21ம் தேதி சிறப்பு திருமஞ்சனத்துடன் திருக்கல்யாணம் நடக்கிறது. பின், 22ம் தேதி வெண்ணைத்தாழி உற்சவமும், குதிரை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடக்கிறது. 23ம் தேதி தேர் திருவிழா, 27ம் தேதி தெப்ப திருவிழா நடக்கிறது.  பிரமோற்சவ நாட்களில் காலை, மாலை இரு வேளைகளில் திவ்யபிரபந்த சேவை மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்து வருகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜவீராசாமி, தனி அதிகாரி கோவி ஆசைத்தம்பி  செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !