உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரங்கநாத சுவாமி கோவிலில் 25ல் மாசிமகத் தேரோட்டம்

அரங்கநாத சுவாமி கோவிலில் 25ல் மாசிமகத் தேரோட்டம்

காரமடை: காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மாசி மகத் தேரோட்டம், வரும் 25ல் நடக்கிறது.கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான, காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மாசிமகத் தேர்த்திருவிழா நடந்து வருகிறது.இந்தாண்டுக்கான திருவிழா, வரும் 18ம் தேதி இரவு 10.30 மணிக்கு, கிராம சாந்தியுடன் துவங்குகிறது. 19ம் தேதி காலை 11.15 மணிக்கு, திருவிழாவுக்கான கொடியேற்றப்படுகிறது. இரவு 8.00 மணிக்கு, அன்ன வாகன உற்சவமும், 20ம் தேதி இரவு 8.00 மணிக்கு, சிம்ம வாகன உற்சவமும், 21ம் தேதி இரவு 8.00 மணிக்கு, அனுமந்த வாகன உற்சவமும், 22ம் தேதி இரவு 8.00 மணிக்கு, கருட சேவையும் நடக்கிறது.23ம் தேதி காலை 11.00 மணிக்கு பெட்டத்தம்மன் அழைப்பும், 24ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவமும், இரவு 8.00 மணிக்கு, யானை வாகன உற்சவமும் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், வரும் 25ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 5.00 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாதப் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்; சிறப்பு பூஜை நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.26ம் தேதி இரவு 10.00 மணிக்கு, பரிவேட்டையும், 27ம் தேதி இரவு 9.00 மணிக்கு, தெப்பத்திருவிழாவும், 28ம் தேதி மாலை 6.00 மணிக்கு, சந்தான சேவையும் நடக்கிறது. மார்ச் 1ம் தேதி காலை 8.00 மணிக்கு, வசந்த உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !