உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்பாசமுத்திரத்தில் மாசி மூன்றாம் திருவிழா: முருக பக்தர்கள் பால்குடம்

அம்பாசமுத்திரத்தில் மாசி மூன்றாம் திருவிழா: முருக பக்தர்கள் பால்குடம்

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் மாசி மூன்றாம் திருவிழாவான நேற்று முருக பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இத்திருவிழாவை ஒட்டி, அம்பாசமுத்திரம் சேனைத்தலைவர் மாசி திருவிழா பாதயாத்திரை குழுவினர் மாலை அணிந்து விரதமிருந்து வருகின்றனர். மூன்றாம் திருநாளான நேற்று, குருசாமிகள் இசக்கி, மரகத சுப்பிரமணியன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் அம்பாசமுத்திரம் தாமிபரணியிலிருந்து, சேனைத் தலைவர் பஜனை மண்டபத்திலுள்ள செல்வ விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத செந்திலாண்டவர் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு பாலாபிஷேகம், அலங்கார தீபாரதனை நடந்தது. இரவில் செல்வ விநாயகர், செந்தில் ஆண்டவர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !