உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நாளை மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

க.பரமத்தி: பவுத்திரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகேயுள்ள பவுத்திரம் மஹா மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு கடந்த, 17ம் தேதி விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று மாலை யாகசாலை பூஜை மற்றும் மஹா தீபராதனை நடந்தது. இன்று காலை பூர்ணாகுதி, யாகசாலை பூஜைகள் நிறைவு பெறுகிறது. நாளை காலை, 7 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை பவுத்திரம் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !