உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஞ்சுக்குள் அனுமன்!

அஞ்சுக்குள் அனுமன்!

சுந்தரகாண்டத்திலுள்ள காப்புச் செய்யுள், அனுமன் பஞ்ச பூதங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதை விளக்குகிறது. பொருள் புரிந்து பாடினால் இதன் சுவை விளங்கும்.

அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக
ஆருயிர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான்

பொருள்: பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவின் பிள்ளை
அனுமன். அவன் கடலைத் (நீர்) தாண்டியும், வான் (ஆகாயம்) வழியாக பறந்தும் இலங்கை சென்றான். பூமிதேவியின்(நிலம்) மகளான சீதையை அங்கே கண்டபின், இலங்கையைத் தீக்கிரையாக்கினான்(நெருப்பு). அவன் நம்மை நிச்சயம் காத்தருள்வான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !