உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மோற்சவ விழா: மோகினி அலங்காரத்தில் காமாட்சியம்மன் உலா!

பிரம்மோற்சவ விழா: மோகினி அலங்காரத்தில் காமாட்சியம்மன் உலா!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன், நேற்று மோகினி அலங்காரத்தில், பல்லக்கில் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளை வலம் வந்தார். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம், கடந்த 16ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் இரவு, உற்சவர் காமாட்சி வெவ்÷று வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஐந்தாம் நாளான, நேற்று காலை காமாட்சியம்மன் மோகினி அலங்காரத்தில், பல்லக்கில் எழுந்தருளி, நான்கு ராஜவீதிகளை வலம் வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று, அம்மனை வழிபட்டனர். இரவு நாக வாகனம் உற்சவம் நடந்தது. ஆறாம் நாளான இன்று காலை சப்பரம், இரவு கிளி வாகனம் உற்சவம் நடைபெற உள்ளது. நாளை காலை 10:00 மணிக்கு ரதோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !