உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் கோயில் குளம் வறண்டது: தெப்பத் திருவிழா கேள்விக்குறி!

ஆண்டாள் கோயில் குளம் வறண்டது: தெப்பத் திருவிழா கேள்விக்குறி!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருமுக்குளத்தில் தண்ணீர் இல்லாததால், இந்தாண்டு மாசி மக தெப்ப திருவிழா நடத்த முடியாத நிலை உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஆண்டுதோறும் மாசி மகத்தையொட்டி, தெப்பத்திருவிழா 3 நாட்கள் நடைபெறும். முதல் நாளில் ஆண்டாள், ரெங்கமன்னாரும், 2 ம் நாளில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமி தேவி, பெரியாழ்வார், ஸ்ரீனிவாச பெருமாள் ஆகியோரும், 3 ம் நாளில் ராமர், சீதாதேவி, லட்சுமணன், கிருஷ்ணன், ருக்மணி, சத்யபாமா, சுந்தரராஜ பெருமாள், சுந்தரவல்லி, சவுந்தரவல்லி ஆகியோரும் பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கும். இதை காண ஏராளமான பக்தர்கள் வருவர். வரும் பிப்.,25 ல், மாசி மக நட்சத்திரம் வர உள்ளது. திருவிழாவிற்கு இன்னும் 4 நாட்களே உள்ளநிலையில், மழை பெய்யாததால், திருமுக்குளம் வறண்ட நிலையில் உள்ளது. இதனால், இந்தாண்டு விழா நடை பெறுவது கேள்விக்குறியாக உள்ளது. இது பக்தர்களை வருத்தமடையச் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !