வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கான தங்கும் விடுதி திறப்பு!
ADDED :4634 days ago
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கான தங்கும் விடுதி, திறக்கப்பட்டது. மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில், சுற்றுலாத்துறை பங்களிப்புடன், இந்து அறநிலையத்துறை சார்பில், 58.50 லட்சம் ரூபாய் செலவில், பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி கடந்தாண்டு துவங்கியது. இவ்விடுதியில், இரண்டு வி.ஐ.பி.,க்கள் அறை மற்றும் பத்து சாதாரண அறைகள் கட்டப்பட்டுள்ளது; சாதாரண அறைக்கு நாளொன்றுக்கு ரூ.500 வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்விடுதியை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சிங்கில் திறந்து வைத்தார். வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் வீரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.