உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நம்பிக்கை நெஞ்சில் வை! தித்திக்கும் உன் வாழ்க்கை!

நம்பிக்கை நெஞ்சில் வை! தித்திக்கும் உன் வாழ்க்கை!

*அடக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்திருந்தாலும் தற்குறிக்குச் சமம். தலைமை ஏற்கும் தகுதி பெற விரும்புபவர்கள் முதலில் கற்க வேண்டிய பண்பு அடக்கம்.
*தன்னம்பிக்கையும், அடக்கமும் ஒரு மனிதனிடம் இருக்குமானால், அவனது வாழ்வு தித்திக்கும். அவனை யாராலும் வெல்ல முடியாது.
*நரகத்திற்குப் பயந்தோ, சொர்க்கத்தை விரும்பியோ தர்மச் செயல்களைச் செய்வது கூடாது. எந்த பலனும் எதிர்பாராமல் செய்ய வேண்டும்.
*அன்பு ஒருபோதும் எதையும் எதிர்பார்க்காது. பிறருக்கு கொடுப்பதில் தான் மகிழ்ச்சி கொள்ளும்.
*படைபலத்தால் கிடைக்கும் வெற்றியை விட, மனதில் இருக்கும் ஆசை, கோபம் ஆகிய இரண்டு உணர்ச்சிகளையும் வெல்வது மேலானது.
*நம்முடன் எப்போதும் கடவுள் இருக்கும்போது, வாழ்வில் ரகசியம் என்பதே இருக்க முடியாது. நம் எண்ணத்தைக் கடவுள் அறிவார் என்ற உண்மையை உணருங்கள்.
*ஆயிரம் பெயர் சொல்லி அழைத்தாலும் உலகில் கடவுள் ஒருவரே இருக்கிறார்.
*தூய பக்தியுணர்வு மனதில் இருக்குமானால் துன்பம் கூட பேரின்பமாகத் தோன்றும்.
*உண்ணாநோன்பு,  உடலோடு உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும்.
*அறிவை விட மேலானது உண்மை. உண்மையை நமது மதமாகப் போற்றுவோம். சிறு சிறு விஷயத்தில் கூட உண்மையாக இருப்பதே தூய வாழ்வின் அடிப்படை ரகசியம்.
*மனித எண்ணத்தை விட சக்தி படைத்தது உலகில் வேறில்லை.
*நாணயமாகச் சம்பாதித்தால் எந்த வேலையும் கவுரவக் குறைவானது அல்ல.
*உழைப்பவர் கையில்தான் இந்த உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பைச் சுரண்டிப் பிழைப்பதால் உண்டாகும் முன்னேற்றம் நிலைத்து நிற்பதில்லை.
*உழைக்காத மனிதனுக்கு உண்பதற்கு கூட உரிமை இல்லை.
*ஆரோக்கியத்தை விரும்பும் மனிதன் உழைப்பதற்குத் தயங்க மாட்டான்.
*உழைக்காமல் உணவு உண்ணும் மனிதர்கள் திருடர்களுக்குச் சமமானவர்கள்.
*அறிவை விட ஒழுக்கம் உயர்வானது. ஒழுக்கமின்மை பல தீமைக்கு வழிவகுக்கும்.
*ஒழுக்கத்தை வெறும் படிப்பறிவால் பெற்று விட முடியாது.
*ஒழுக்கமில்லாத மனிதனை பதர் என்று தான் சொல்ல வேண்டும்.
*கல்வியின் குறிக்கோளாக ஒழுக்கத்தைக் கொள்வது அவசியம்.
*கைமாறு கருதாமல் பிறருக்கு நன்மை செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
*ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் ஒற்றுமைக்கு ஊறு விளைவதில்லை.
*நாம் செய்யும் ஒவ்வொரு நன்மை, தீமைக்கும் கடவுள் சரியான கணக்கு வைத்திருக்கிறார். அவருக்கு இணையான கணக்குப் பிள்ளை வேறு யாருமில்லை.
*எதை மனிதன் விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான் என்பது கடவுள் வகுத்த விதி. இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.
*குழந்தைப் பருவத்தில் உருவாகும் கருத்துக்கள், ஆழ்ந்த வேர் போல மனதில் பதிந்து விடுகின்றன.
*அநியாயத்தை எதிர்த்து நிற்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
*மன சாந்திக்காகவே இசை, நடனம்முதலிய கலைகள் உருவாகின.
-காந்திஜி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !