பிரம்மோற்சவ விழாவில் காமாட்சியம்மன் ரதோற்சவம்!
ADDED :4977 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நேற்ö ரதோற்சவம் நடந்தது.காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம், கடந்த 16ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்öம் இரவு, உற்சவர் காமாட்சி வெவ்வேö வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெöகிறது.ஏழாம் நாளான நேற்று காலை காமாட்சியம்மன், ரதோற்சவத்தில் எழுந்தருளி, நான்கு ராஜவீதிகளை வலம் வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று, அம்மனை வழிபட்டனர்.எட்டாம் நாளான இன்ö காலை 10:00 மணிக்கு காமாட்சியம்மன் பத்ரபீடத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் வீதியுலா வருகிறார். நாளை காலை ஆள்மேல் பல்லக்கு உற்சவமும், இரவு வெள்ளி ரதம் உற்சவமும் நடைபெற உள்ளது.