பழநி மாரியம்மன் மாசித்திருவிழா முகூர்த்தகால் நாட்டுதலுடன் துவக்கம்
ADDED :4694 days ago
பழநி: பழநிகோயிலின் உபகோயிலான மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா நேற்று முகூர்த்தகால் நாட்டுதலுடன் துவங்கியது. பழநிதேவஸ்தான உபகோயில்களில் ஒன்றான மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.22ல் துவங்கி மார்ச் 14 வரை தொடர்ந்து 21 நாட்கள் நடக்கிறது. நேற்று மாரியம்மன் சன்னதியில் முகூர்த்தக்கால் நடும் விழா விழா நடந்தது.மாசித்திருவிழா முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் அலங்கரித்தல், திருக்கம்பம் சாட்டுவிழா பிப்.26ல் நடக்கிறது. மார்ச் 5ல் தங்கமயில் வாகனத்தில் அம்மன் திருவுலா, இரவு 7 மணிக்கு பூவோடு வைத்தல் போன்ற பல நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மார்ச் 12ல் திருக்கல்யாணமும், மார்ச் 13ல் அம்பாள் திருத்தேர் திருவிழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை பழநிகோயில் இணை கமிஷனர் பாஸ்கரன் செய்து வருகிறார்.