ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் பங்குனி குண்டம்
தேர்த்திருவிழாவையொட்டி, நேற்று முகூர்த்தகால் நடப்பட்டது. மார்ச், 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்க உள்ளது.ஈரோடு, பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டுக்கான பங்குனி குண்டம் தேர்த்திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது. மூன்றாவது மண்டல தலைவர் மனோகரன் தலைமை வகித்து, முகூர்த்த கால் நட்டு வைத்தார்.பெரியமாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சுப்பிரமணியம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் முருகேசன், கவுன்சிலர் சுப்பிரமணியம், பந்தல் பரமசிவம் ஆகியோர் பங்கேற்றனர்.மார்ச், 19ம் தேதி இரவு, 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் குண்டம் தேர்த்திருவிழா துவங்குகிறது. அதை தொடர்ந்து, 23ம் தேதி இரவு, 8.30 மணிக்கு பட்டாளம்மன் சிறப்பு அபிசேகம், 10.30 மணிக்கு கம்பம் நடுதல், 27ம் தேதி இரவு, 10.30 மணிக்கு கிராம சாந்தி நடக்கிறது. 28ம் தேதி மாலை, 5 மணிக்கு கொடியேற்றப்படுகிறது.