பாப்பாக்குடி முன்றீஸ்வரர் கோயிலில் மாசித் தேரோட்டம்
ADDED :4610 days ago
முக்கூடல்:பாப்பாக்குடி திருக்கடுக்கை முன்றீஸ்வரர் கோயிலில் மாசித் தேரோட்டம் நடந்தது. திருக்கடுக்கை முன்றீஸ்வரர் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்தது.திருவிழா ஒன்பதாம் நாளன்று தேரோட்டம் நடந்தது. காலையில் சுவாமி, அம்பாள் தேருக்கு அழைக்கபப்ட்டனர். தொடர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திரளான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். பாப்பாக்குடி சஞ்சீவிதர்மராஜய்யர் குடும்பத்தினர் மற்றும் சமுதாய தலைவர்கள், பிரமுகர்கள், கோயில் நிர்வாகி நடராஜன், பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நேற்று பத்தாம் நாளில் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலாவும் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக்கமிட்டியார் செய்திருந்தனர்.