திண்டிவனம் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம்!
புதுச்சேரி: திண்டிவனம் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு, வாசவி திருமண மண்டபத்தில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.மாசிமக தீர்த்தவாரிக்காக திண்டிவனம் ஸ்ரீநிவாசப் பெருமாள் புதுச்சேரிக்கு வந்தார். வைசியாள் வீதியில் உள்ள வாசவி திருமண மண்டபத்தில், ஸ்ரீதேவி ஸ்ரீ பூமிதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு நேற்று காலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திருக்கல்யாண வைபவத்தின்போது, சிறப்பு ஸ்ரீ ஹரி பஜனையும் நடந்தது. கண்ணன் பட்டாச்சாரியார், பார்த்தசாரதி பட்டாச்சாரியார், சத்தீஷ் பட்டாச்சாரியார், பாலாஜி பட்டாச்சாரியார் ஆகியோர் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீநிவாசப் பெருமாள் மாசிமகக் கடல் தீர்த்தவாரி கமிட்டியின் கவுரவத் தலைவர்கள் பொன்னுரங்கம், வெங்கடேச ராமானுஜதாசர், தலைவர் ஞானப்பிரகாசம், நிர்வாகிகள் சுரேஷ், மாறநேரி நம்பி, முனுசாமி, ராதாகிருஷ்ணன், வேங்கடாஜலபதி, ராமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். திருக்கல்யாண உற்சவத்தில் எதிர்க்கட்சித்தலைவர் வைத்திலிங்கம் உள்பட பலர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. பின், சாமி திண்டிவனத்துக்குப் புறப்பட்டார்.